யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் முக்கிய திருப்பு முனை வருகின்ற போது அதில் பாதிப்புக்கள் கூட வரலாம். அல்லது பல புதிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். ஆகையினாலே மிக அவதானமாக முதிர்ச்சியோடு இந்த சூழ்நிலைகளை கையாள வேண்டும்.

அப்படியான மிக முதிர்ச்சியான அனுபவமிக்க தலைமை எங்களிடத்தில் உள்ளது. நாம் அதனை நிதானமாக பொறுப்புடன் முன்னெடுக்கின்றோம். நாம் இராஜ தந்திரமாக செயற்பட வேண்டும்.

எனவே மக்களும் பொறுமையாக எம்முடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக கல்வி சமூகம் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கூறினார்.