Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல்கள் குறித்து ஐநாவில் இம்ரான்கான்

விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல்கள் குறித்து ஐநாவில் இம்ரான்கான்

1 minutes read

தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது; 

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. ஆனால் தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என்று விடுதலை புலிகளை முன்வைத்து கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:

“ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய தொகை ஏழை நாடுகளை விட்டு வெளியேறி உலகின் பணக்கார நாடுகளை அடைகிறது, இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகிறது. இது வளரும் உலககுக்கு பேரழிவை தரும். இதுதான் உலகில் அதிக வறுமையையும் இறப்பையும் ஏற்படுத்துகிறது.

செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. அது ஏன் தொடங்கியது? ஏனென்றால் சில மேற்கத்திய தலைவர்கள் பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர இஸ்லாம் என்று அழைத்தனர்.

தீவிர இஸ்லாம் என்றால் என்ன? ஒரே ஒரு இஸ்லாம் மட்டுமே உள்ளது, தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. இந்த இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம். இது இஸ்லாமியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் செப்டம்பர் 2001க்கு முன்பு பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குதல்களை இந்துக்களாக இருந்த தமிழ் புலிகளால் (விடுதலை புலிகளால்) நடத்தப்பட்டது. அப்போது இந்து மதத்தை யாரும் குறை கூறவில்லை. அது மிகவும் சரியானது. இலங்கையில் நம்பிக்கை இழந்த மக்கள் செயத விஷயங்களுக்காக இந்து மதத்தை எப்படி தொடர்புபடுத்த முடியும்? எனவே தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. மேற்கு உலகம் இஸ்லாம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று வெறுப்பு உருவாக்கப்படுகிறது” இவ்வாறு கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More