Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கனேடிய பொதுத் தேர்தல்: ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி

கனேடிய பொதுத் தேர்தல்: ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி

1 minutes read

கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார்.

2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட அவர் 21 ஆயிரத்து 241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேற்றிவ் கட்சியின் பொப்பி சிங் 20.1 வீத வாக்குகளையே பெற்றுள்ளார். புதிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 11.4 வீதமும், கிறீன் கட்சி வேட்பாளருக்கு 4.6 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

தேர்தல் இறுதி முடிவுகளின்படி லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 31,339 வாக்குகளையும் கொன்சர்வேற்றிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட பொப்பி சிங் 10,088 வாக்குகளையும் புதிய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கிங்ஸ்லி வோக் 5,735 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More