Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்

கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்

1 minutes read

எனக்கு தூ க் கு ப் போட கயிறு தாங்க.. 9 வயது சிறுவனின் கதறல்.. உலகை உலுக்குறது... நெஞ்சை உருகவைத்த காட்சி..!

உலக வாழ்வை வெறுப்பதற்கும், தற்கொலை எண்ணம் வருவதற்கும் வாழ்வில் பலகட்ட சோகங்கள் தான் காரணம். ஆனால் அதற்கு கொஞ்சம் வயதும் ஆகிவிடுகிறது. ஆனால் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன் தற்கொலை எண்ணத்துடன், கத்தி கேட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் இதனை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்தான் தன் 9 வயதான மகன் குவார்டன் தற்கொலை எண்ணத்தோடு கதறி அழும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதாவது அவரது மகன் குவார்டனுக்கு தலை கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. கை, கால்கள் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இதனாலேயே தன்னை பள்ளியில் உள்ள அனைவரும் கேலி செய்து கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி அந்த சிறுவன் தன் தாயிடம் கதறி அழுகிறான். இது பார்ப்போரை உருகச் செய்கிறது.

மேலும் அந்த அழுகையின் ஊடே சிறுவன், எனக்கு ஒரு கத்தியை கொடுங்க. நானே என்னை கொலை செஞ்சுக்குறேன் என கதறுவது காண்போர் உள்ளத்தை உருகச் செய்கிறது. உலக அளவில் அதிகமானோர் அதை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

 

https://youtu.be/bIBgn-R3yeU

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More