மது அருந்தினால் கொரோனா பரவாது?; உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

மது அருந்துவதால் கொரோனா வைரஸை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பான WHO தெரிவித்துள்ளது

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இது வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், வைரஸை அழிக்கவும் மது அருந்துவது உதவும் என சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரப்பப்பட்டன.

இதுகுறித்து, விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், உரிய வழிக்காட்டுதல் இல்லாமல் இவ்வாறு செய்வது, ஆபத்தை விளைவிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

 

 

ஆசிரியர்