தகவல் மறைத்த நோயாளிக்கும் மனைவிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றியமை தொடர்பில் தகவல் மறைத்து நோயாளி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக தற்போது வரையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பதிவாகிய இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளி, கொழும்பு கல்கிசை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் என சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட ஜேர்மனுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட நபருடன் இந்த நபர் பயணித்துள்ளார். தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதி செய்துக் கொண்ட முதல் நபர், கல்கிசையில் உள்ள தனது நண்பருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தனது நண்பரிடம் இருந்து கிடைத்த தகவலின் பின்னர் இந்த நபர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று PCR சோதனை செய்து கொண்டுள்ளார். அந்த சோதனையில் தனக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள உறுதியாகியுள்ளது. தனக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாகிய பின்னர் அவர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதியாகாமல் வீட்டில் இருந்துள்ளார் என வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகியவுடன் அவரை தொடர்பு கொள்வதற்கு சுகாதார பிரிவு பாரிய முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியில் அரச புலனாய்வு பிரிவின் உதவியுடன் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த நபர் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதாகவும் கொரோனா வைரஸ் தொற்றியிருந்த போது குறித்த நபர் சென்று வந்த இடங்கள் பழகிய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்