September 21, 2023 2:20 pm

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வலை வீச்சு! பொலிஸ், இராணுவம் மீது கற்களை கொண்டு தாக்குதல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீதியோரங்களில் அநாவசியமாக நடமாடி திரிகின்றவர்களின் விபரங்களை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதிகளில் கிராம சேவகர்களின் உதவியுடன் சிசிடிவி காணொளி மற்றும் ஊடகவியலாளர்களினால் சேகரிக்கப்பட்ட ஒளிப்படங்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரும் முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளிற்கு இணங்க கல்முனை, கல்முனை குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை போன்ற மத வழிபாட்டு தலங்களில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் ஒலிபெருக்கி வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு வேளையிலும் வீடு வீடாக கிராம சேவகர்களின் உதவியுடன் பொலிஸார் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்