இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் பலி! திணறும் மருத்துவர்கள்- களமிறங்கியது சீனக்குழு

இத்தாலியில் நேற்று மட்டும் 793 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்த மோசமான சூழ்நிலையில் திணறிவருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வீரியடைந்துவருகிறது.

உலகில் கொரோனாவால் அதிக பலி எண்ணிக்கையை எடுத்த நாடாக இத்தாலி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மருத்துவர்கள் திணறி வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனாவால் இத்தாலியில் உயிரிழப்பு கட்டு மீறி சென்றுள்ளதை அடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீனா களமிறங்கி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சீன மருத்துவர்களுக்கு அனுபவம் இருப்பதால் அங்கிருந்து விசேட மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்களுடன் களமிறங்கி உள்ளனர்.

கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று இத்தாலிய அமைச்சர் லூய்கி டிஐ மாயோ அச்சம் வெளிப்படுத்தி உள்ளார்.

10,000 வெண்டிலேட்டர்கள், 20 லட்சம்முகமூடிகள், 20,000 ஆயிரம் பாதுகாப்பு சூட்கள், இதை தவிர மருத்துவ உதவிகள் போன்றவைகளை இத்தாலிக்கு தந்து உதவ சீன அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதனால் விரைவில் இத்தாலியில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்