சுவிஸ் மத போதகரை காப்பாற்றிய ஸ்ரீலங்கா பொலிசாரே கொரோனாவுக்கு காரணம்!  சீறிய ஆளுநர்

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து பொலிசார் தான் காப்பாற்றியதாக வடக்கு மாகாண ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் உரடங்கு சட்டம் இன்று பிறிபகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இந்த இடைவெளியில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று அந்தந்த பிரதேசங்களிலிருக்கும் மருந்தகங்களுக்கும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தேவையான மருந்துகளை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்