மேலும் 4 பேருக்கு கொரோனா; இலங்கையில் நோயாளிகள் எண்ணிக்கை 150ஆனது!

இலங்கையில் இன்று மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவரின் சடலம் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

 

ஆசிரியர்