May 31, 2023 6:03 pm

456பேர்; இலங்கையில் அதிக தொற்று கடைப்படையினருக்கே!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் என இன்று அடையாளம் காணப்பட்ட இருவரும் கடற்படையினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனுடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 456 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை 61 கடற்படையினர், PCR பரிசோதனை நடத்தப்பட்டு, முற்றாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தற்போது 378 கடற்படையினர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்