இலங்கையில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!

எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல் நாடு தழுவிய ரீதியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊடரங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கடந்த 11 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்