இன்று கடுமையான ஊரடங்கு சட்டம்! எச்சரிக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இன்றைய தினம் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை முழுமையாக செயற்படுவது அவசியம் என்பதனால் அதற்கு கீழ்படியாத நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம் கொழும்பு – கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்