நேற்று 25 கொரோனா நோயாளிகள் இனம்காணப்பட்டனர்!

இலங்கையில் நேற்றைய தினம் 25 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 11.55 மணியளவில் மேலும் 3 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முழுமையான நோயாளிகளின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, நேற்று அடையாளம் காணப்பட்ட 25 பேரில் 23 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 520 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 430 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆசிரியர்