பிறந்த நாளுக்கு 3 நாட்கள் இருந்த நிலையில் மரணித்த தொண்டமான் – காரணம் என்ன?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்

அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆறுமுகம் தொண்டமான் அதன் பின்னர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வழமையை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை தலங்கம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.

தொண்டமான் தனது 56 வயது பிறந்த நாளை எதிர்வரும் 29ஆம் திகதி கொண்டாடவிருந்தார். எப்படியிருப்பினும் அதற்கு 3 நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

1994ஆம் ஆண்டு தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு நுழைந்து அன்று முதல் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அக்கட்சியின் தலைவராக உயிரிழந்துள்ளார்.

தற்போது கட்சியின் தலைவராக தொண்டமானின் சகோதரியின் மகனான செந்தில் தொண்டமான கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்