Saturday, September 25, 2021

இதையும் படிங்க

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழப்பு

 நாட்டில் (நேற்று 23.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 51 ஆண்களும்...

இந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்றுமதி :அமெரிக்கா வரவேற்ப்பு!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த...

ரஷியாவில் கடும் பனிப்புயல்- மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

மலைச்சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள், இறங்கும்போது கடுமையான பனிப்புயல் வீசியதால் நிலைகுலைந்தனர். ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ்...

சம்பிக்கவிடம் 3 மணிநேர வாக்கு மூலம் பதிவு!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகிய, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம்...

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம்!

தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத...

இலங்கை, அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள...

ஆசிரியர்

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன்

  • கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம்
  • இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி
  • எம்.சி.சி. உடன்படிக்கைக்கு எந்தவிதமான பதிலீடும் இல்லை
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முழு நிறைவானது அல்ல

ஜெனிவா தீர்மானம் இலங்கையை பலவீனப்படுத்துவது அல்லது அதனை நவீன காலனித்துவ நோக்கங்களுக்கு உட்படுத்துவது என்று கொள்ளப்படுவதை நான் நிராகரிக்கிறேன். மாறாக சர்வதேச மனித உரிமைகளின் அடிப்படை கொள்கைகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கும் நடைமுறையில் அந்த கொள்கைகள் தொடர்பான அமுலாக்கத்துக்கும் இடையிலான இடைவெளியை சுருக்குவதற்கான அழைப்பொன்றாகும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் வழங்கிய முழுமையான செவ்வி வருமாறு, 

கேள்வி:- மேற்குலக நாடுகளிடம் இருந்து இலங்கை தற்போது தம்மை தாமகவே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அப்படியென்றால் இந்த போக்கு பற்றி உங்களால் விபரிக்க முடியுமா?

பதில்:-  உலகளாவிய தொற்றுநோய் பரவலுடன் ஒவ்வொரு நாடும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. குறிப்பாக பொருளாதார ரீதியாக இணைந்துள்ளன. தனிமைப்படுத்தப்படும் பட்சத்தில் பொருளாதார ரீதியாக தம்மை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய எந்த நாடும் கிடையாது.

குறிப்பாக அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருக்கிறது. ஏறக்குறைய 180,000 இலங்கை தொழில் வாய்ப்புகளுக்கு அமெரிக்க நுகர்வோர் பொறுப்பாக இருக்கின்றனர். ஆகவே நாடுகள் இணைந்து செயற்படுவதிலேயே பொருளாதாரங்கள் தங்கியுள்ளன.

அனைத்து நாடுகளினதும் பாதுகாப்புக்காகவும் இறையாண்மை மற்றும் பொருளாதார நலனின் பாதுகாப்புக்காகவும் வணிகங்கள் போட்டியிடுவதற்கும் நாடுகள் அதன் ஒப்பந்தங்களில் இருந்து சிறந்த பெறுமதியை பெறுவதற்கும் நியாயமான வாய்ப்பொன்றை வழங்கும் சுயாதீனமானதும் திறந்ததுமான பொருளாதார வாய்ப்பை அமெரிக்கா ஆதரிக்கிறது. 

கேள்வி:- மேற்குலகுக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் அமெரிக்கா எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தப் போகிறது?

பதில்:- இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாடுகளை சுற்றிலும் தவறான புரிதலை உருவாக்கும் முயற்சி இருப்பதாக தெரிகிறது. அது துரதிரஷ்டவசமானது என்பதுடன், இறுதியில் இலங்கையே அந்த பிரசாரத்தினால் பாதிக்கப்படுகிறது. 

ஆனால் அரசாங்கத்துடனான உறவிலிருந்தோ அல்லது எமது உரையாடல்களிலிருந்தோ நாம் பின்வாங்கவில்லை. அமெரிக்க, இலங்கை உறவானது 70 வருடங்களையும் விடவும் பழமையானது. நாம் போசிப்பது நீண்டகால உறுதிப்பாடொன்று என்பதுடன், நீண்டகால உறவொன்று என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்.

இலங்கையுடனான எமது பங்காண்மையை ஆழமாக்கிக் கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கும் ஒரு வழி அதனது பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதாகும். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் ஊடாக தொழில் வாய்ப்புகளையும் எதிர்கால வளர்ச்சியையும் உருவாக்குவதற்கு தனியார் துறையினர் சாந்த ஏனையவர்களுடனும் நாம் இணைந்து பணியாற்றுகிறோம். 

கேள்வி:- எம்.சி.சி. ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதன் பின்னர், எம்.சி.சி. திட்டத்தை பதிலீடு செய்வதற்கு அமெரிக்காவினால் ஏதேனும் புதிய நகர்வொன்று மேற்கொள்ளப்படுமா?

பதில்:- இலங்கை அரசாங்கத்திடம் இருந்தான வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே உத்தேச எம்.சி.சி. அபிவிருத்தி அன்பளிப்பு உதவித்தொகை முன்வைக்கப்பட்டது. ஈடுபாடின்மை காரணமாக இந்த முன்மொழிவு வாபஸ் பெறப்பட்டதுடன், அந்த நிதிகள் வேறு இடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

இலங்கை அரசாங்க அமைச்சுகளினாலும் வரிசெலுத்தும் அமெரிக்க மக்களின் செலவில் நிறைவுசெய்ய பல ஆண்டுகள் எடுத்த வடிவமைப்பு முயற்சியொன்றான கல்விசார் ஆய்வினாலும் அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து மற்றும் காணி நிர்வாக துறைகளிலான தேவைகளை பூர்த்திசெய்வதற்காக கோரப்பட்ட இந்த கடனற்ற அபிருத்தி உதவித் தொகைக்கு பதிலீடு எதுவும் இருக்காது.

:

இதையும் படிங்க

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

அண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...

கோவிட் தொற்றிற்கு பலியான இளம் பெண் மருத்துவர்

கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

மதுபானங்களுடன் 7 பேர் வசமாக மாட்டினர்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 560 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன்...

தொடர்புச் செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...

தமிழ்நாட்டில் காவல்துறை அதிரடி | 48 மணி நேரத்தில் 560 ரவுடிகள் கைது!

தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

மும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் பதிவுகள்

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 491 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில்...

மீண்டும் அஜித் – விஜய் மோதலா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அஜித்துக்கும், விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜித் - எச்.வினோத் கூட்டணியில்...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும்...

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் தடை

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி...

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள்

பிந்திய செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

அண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச்...

துயர் பகிர்வு