Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நீதி, நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல | பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செவ்வி

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நீதி, நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல | பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செவ்வி

3 minutes read

நேர்காணல்:- ஆர்.ராம்

படப்பிடிப்பு:- ஜோய் ஜெயக்குமார் 

 • ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் யேமனில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து யாரும் ஏன் பேசவில்லை? ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஏன் அந்த நாடுகளுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வரவில்லை?

• இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்பதோடு அனைத்து ஜனநாயக நாடுகளிலும், சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

• பாதுகாப்பு, அனைத்து நாடுகளுக்கும் தேவையானதொரு விடயமாக இருக்கையில் சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகள் குவாட்டினுள் உள்வாங்கப்படாமை ஏன்?

• உதவிகளை வழங்கும் சீனா எந்தவொரு நாட்டின் உள் விவகாரங்களிலும் தலையீடு செய்வதில்லை. இந்திய, இலங்கை உறவும் உள்ளக விவகாரங்களில் தலையீடு இல்லாமல் இருப்பதாக கருதுகின்றோம்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக இறு­தி­யாக  நிறை­வேற்றப்பட்ட ‘இலங்­கையில் மனி­த ­உ­ரி­மைகள், பொறுப்­புக்­ கூறல், மற்றும் நல்­லி­ணக்­கத்தினை முன்­னேற்­றுதல்’ எனும் தலைப்­பி­லான தீர்­மா­ன­மானது நீதி, நெறி­மு­றை­க­ளுக்கு அமை­வா­னது அல்ல என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்­மது சாத் கட்டாக் வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.

அவ்­வி­சேட செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான்கானின் இலங்கை விஜயம் வெற்­றி­க­ர­மா­ன­தெனக் கரு­து­கின்­றீர்­களா? அப்­ப­டி­யாயின் அது எப்­படி என்­பதை கூறு­வீர்­களா?

பதில்:- பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான்கானின் இலங்கை விஜ­ய­மா­னது மிகவும் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது என்­ப­தனை அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பிர­மாண்­ட­மான வர­வேற்பு, மற்றும் இலங்கை ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர், எதிர்க்­கட்­சித்­த­லை­வர்கள், அமைச்­சர்கள் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­புக்கள் என்­ப­ன­வற்றை இதற்கு ஆத­ர­மாகக் கூற முடியும்.

அத்­துடன், இரு பிர­த­மர்­களின் முன்­னி­லையில் ஐந்து புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைகள் கைச்­சத்­தி­டப்­பட்­டன. அதற்கு மேல­தி­க­மாக, பாது­காப்பு கடன் பொ­தி­யாக 50மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களும், விளை­யாட்­டு­த்துறை அபி­வி­ருத்­திக்­காக 52மில்­லியன் பாகிஸ்தான் ரூபா நிதியும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், மருத்­து­வத்­து­றையில் நூறு மேல­திக புல­மைப்­ப­ரி­சில்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

அது­மட்­டு­மன்றி, பிர­தமர் இம்ரான் கான், இலங்கை ஜன­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ருடன் கட்­டாயத் தகனம் தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்தார். இந்­நி­லையில் அவர் நாட்­டை­ விட்டு வெளி­யே­றிய மறு­தி­னமே இலங்கைத் தலை­மைத்­துவம் பாகிஸ்­தா­னுடன் கொண்­டி­ருந்த வலு­வான நட்­பு­றவை நிரூ­பித்­தது. 

மிக முக்­கி­ய­மாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்­கான ஆத­ர­வினை வழங்­கி­யதன் மூலம் பாகிஸ்தான்  இலங்­கையின் மீதான தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஒட்­டு­ மொத்­த­மாக பாகிஸ்தான் பிர­த­மரின் இலங்கை விஜயம் பாரிய வெற்­றி­யாகும்.

கேள்வி:- ஆனால் பிர­தமர் இம்ரான் கானின் இலங்கை பாரா­ளு­மன்ற உரை இறுதி நேரத்தில் இரத்துச் செய்­யப்­பட்­ட­தல்­லவா?

பதில்:- இலங்கை அர­சாங்­கமே பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான்கான் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்ற வேண்டும் என்­ப­தற்­கான  முன்­மொ­ழிவைச் செய்­தி­ருந்­தது. பின்னர், கொரோனா நிலை­மையால் அதனை இரத்துச் செய்­வ­தற்கு முடிவு செய்­தனர். 

கேள்வி:- ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் ‘இலங்­கையில் மனி­த­ உ­ரி­மைகள், பொறுப்­புக்­கூறல், மற்றும் நல்­லி­ணக்­கத்­தினை முன்­னேற்­றுதல்’ எனும் தலைப்­பி­லான தீர்­மா­னத்­திற்கு எதி­ராக பாகிஸ்தான் வாக்­க­ளித்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- பாகிஸ்­தா­னா­னது  ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தை சுதந்­திர மற்றும் இறை­யாண்மை கொண்ட ஒரு நாட்டின் உள்நாட்டு விவ­கா­ரத்தில் நேர­டி­யாக தலை­யி­டு­வ­தாக கரு­தி­யது. மேலும், பாகிஸ்­தானும் இலங்­கையும் பல தசாப்­தங்­க­ளாக நீண்ட நட்­பு­றவைக் கொண்­டி­ருக்­கின்­றன. இரு நாடு­களும் எப்­போதும் உறு­து­ணை­யாகவே நின்­றி­ருக்­கின்­றன. எனவே, இந்­த­த் த­டவை கூட  பாகிஸ்தான் ஏன் இலங்­கைக்கு சார்­பாக  நின்­றது என்­பதில் யாரும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More