தேவையானவை
ராகி நூடுல்ஸ் – 2 கப்
வெங்காயம் – 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
குடை மிளகாய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
முட்டைகோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
நெய் – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் ராகி நூடுல்ஸை சிறிது உப்பு நீர் தௌித்து பிசறி ஆவியில் வேக வைத்து எடுத்து, பிறகு உதிர்த்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், குடை மிளகாய், முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் வெங்காயத்தாள், இஞ்சி – பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு வேகவைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ராகி நூடுல்ஸ் தயார்.