Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சும்மா இருப்பது பற்றி! சும்மா படித்துப் பாருங்கள்!!

சும்மா இருப்பது பற்றி! சும்மா படித்துப் பாருங்கள்!!

2 minutes read

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.

*அது சரி *சும்மா* என்றால் என்ன??

*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*

“சும்மா”
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை
நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1 . கொஞ்சம்* “சும்மா” இருடா?
( அமைதியாக/Quiet)

2.கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely*)

3.அவரைப் பற்றி “சும்மா” சொல்லக் கூடாது!
(அருமை/in fact)*

4.இது என்ன “சும்மா கிடைக்கும்னு
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)

  1. சும்மா” கதை அளக்காதே?
    (பொய்/Lie)
  2. “சும்மா” தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்
    (உபயோகமற்று*/Without use)
  3. “சும்மா” “சும்மா” கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)*

8.இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டு இருப்பான்.
(எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை “சும்மா” சொல்கின்றேன்
(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது
(காலி/Empty)

11.சொன்னதையே “சும்மா” சொல்லாதே.
(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது– (வெறுங் கையோடு/Bare)

  1. 13 “சும்மா”தான் இருக்கின்றோம்
    (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் “சும்மா” ஏதாவது உளறுவான்
(வெட்டியாக/idle)

15.எல்லாமே “சும்மா” தான் சொன்னேன்
(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *”சும்மா”*
*என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது. (என்றால் அது சும்மா”இல்லை!)

*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.

*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும்.

படித்ததில் பிடித்தது – நன்றி: பேஸ்புக்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More