Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

1 minutes read

‘உறியடி’, ‘உறியடி 2’ படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனகர்த்தாவுமான விஜய்குமார், கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது.

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் கேரள தேசத்து நடிகை தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய லியோன் பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். லைஃப்ஸ்டைல் எக்சன் டிராமா ஜேனரில் தயாராகும் இந்தப் படத்திற்கு ‘96’ புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More