செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர் வெளியீடு

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர் வெளியீடு

0 minutes read

‘வைகைப்புயல்’ வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்துவரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இவருடன் நாய் ஒன்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

தர்மா சந்துரு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வைகை புயல் வடிவேலு பின்னணி பாடியிருக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கும் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.