செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பதுளையில் சுதந்தர கிண்ண மாகாண கால்பந்தாட்டம்

பதுளையில் சுதந்தர கிண்ண மாகாண கால்பந்தாட்டம்

1 minutes read

குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து பதுளை நகரில் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்தர கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இன்றும் (06) நாளையும் (07) நடைபெறவுள்ளன.

மத்திய மாகாணத்தை அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் உள்ள வட மாகாணம் இன்று பிற்பகல் நடைபெற உள்ள முதலாவது போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்துடனான போட்டியை வெற்றி தோல்வியின்றி (0-0) முடித்துக்கொண்ட வடமாகாண அணி, ஊவா மாகாணம் (2-0), தென் மாகாணம் (3-1) ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தது.

கடைசி இரண்டு போட்டிகளில் திறமையாக விளையாடிய வட மாகாணம் இன்றைய போட்டியிலும் அதே திறமையை வெளிப்படுத்தினால் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0-0) முடித்துக்கொண்ட மத்திய மாகாணம் மேல் மாகாணத்துடனான போட்டியில் தோல்வி (0-3) அடைந்தது. 

எனினும் 8 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஊவா அணியை 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் தனது 3ஆவது போட்டியில் வெற்றிகொண்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ஊவா மாகாணத்தை கிழக்கு மாகாணம் எதிர்த்தாடவுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற மத்திய மாகாணத்துடனான போட்டியில் சிவப்பு அட்டைக்கு இலக்கான 4 வீரர்கள் இன்றைய போட்டியில் ஊவா மாகாண அணியில் இடம்பெறமுடியாது.

பைராஸ் ஸஹீர், எம்.ஏ.எம். இர்பான், கவித ரவிஹான, நந்தன ஹேரத் ஆகிய ஊவா அணி வீரர்களுக்கே இன்றைய போட்டியில் விளையாட முடியாது. இது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கவுள்ள மற்றைய வீரர்கள் தங்களது கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி ஊவா அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சிக்கவுள்ளனர்.

மறுபுறத்தில் மத்திய மாகாணம் (0-0), ரஜரட்ட (1-1), சப்ரகமுவ மாகாணம் (0-0) ஆகிய 3 அணிகளுடனான போட்டிகளையும் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ள கிழக்கு மாகாணம் இன்றைய போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுவதற்கு முயற்சிக்க உள்ளது. – 

(என்.வீ.ஏ.)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.