Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம்!

0 minutes read

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் பசறையில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியினரால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, வரி அறவீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றிரவு 7 மணியளவில், கொட்டும் மழைக்கு மத்தியிலும் தீப்பந்தம் ஏந்தி, பாதாதைகளைச் சுமந்தவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் மடுல்சீமை செல்லும் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக பரகொல்ல செல்லும் சந்தி வரை சென்று பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More