December 4, 2023 7:29 am

மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கின்னஸ் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

49 வயதான மார்க் ஓவன் எவன்ஸ் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.

இதைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்