December 7, 2023 12:23 am

ரஷிய போருக்கு பிறகு முதன்முறையாக கனடா செல்லும் உக்ரைன் ஜனாதிபதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கனடா செல்லும் உக்ரைன் ஜனாதிபதி

உலக நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி.

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார். கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷ்யாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார்.

இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா ஜனாதிபதி ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷ்யா மீது குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பின் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார்.

எனினும், இதற்கு முன்னதாக வீடியோ மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்