December 6, 2023 11:15 pm

எரிபொருள் ஏற்றுமதிக்கு தற்காலிக தடைவிதித்த ரஷ்யா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
எரிபொருள் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை

உக்ரைன் மீது ரஷ்யா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

இதனால் ரஷ்யாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

அத்துடன், ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.

ரஷ்யா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனையடுத்து, ரஷ்யாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்