Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் முதல்முறையாக மக்களவை நாயகர் பதவி நீக்கம்

அமெரிக்காவில் முதல்முறையாக மக்களவை நாயகர் பதவி நீக்கம்

0 minutes read

அமெரிக்க மக்களவை நாயகர் கெவின் மெக்கார்தி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புளோரிடா நாடாளுமன்ற உறுப்பினர் மேட் கேட்ஸ், மெக்கார்தியைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை நேற்று முன்தினம் (2) முன்வைத்தார்.

அண்மையில் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகக்கூடிய நிலையில் இருந்த போது, அதனை தவிர்ப்பதற்குத் மெக்கார்தி
போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 208 பேருடன் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் மெக்கார்தியின் பதவி நீக்கத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

மக்களவை நாயகருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கும்படி ஜனாதிபதி ஜோ பைடன் மக்களவையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More