December 3, 2023 11:11 am

காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அறிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல், ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த உள்ளோம் எனவும் அறிவித்துள்ளார். இதனால் காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்