செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

1 minutes read

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து திரையுலக ரசிகர்களும் விரும்பும் வகையினதான பல படங்களை அளித்து, இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்கிறார்.

இவரது நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படமான ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மகதா வங்கி எனும் வங்கியில் பணியாற்றும் காசாளர் கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார்.  இதனை முதன்மைப்படுத்தியே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி படக்குழுவினர் பேசுகையில்,‘ இந்த படத்தின் கதை 1980 ஆம் ஆண்டில் பாம்பே எனும் மாநகரில் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது ஒரு வங்கியில் பணியாற்றும் காசாளர் அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை சுவராஸ்மான அம்சங்களுடன் விவரித்திருக்கிறோம். ” என்றனர்.

‘லக்கி பாஸ்கர்’ படத்தில் கதையின் நாயகனான துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேசிய விருதுப் பெற்ற இசையமைப்பாளரான ஜீ. வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். இயக்குநர் வெங்கி அட்லூரி ஜீ வி பிரகாஷ்குமார் கூட்டணி, ‘வாத்தி’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வெளியாகவிருக்கும் இந்த படத்தை ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யா மற்றும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.