செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இசை கேட்ட இளைஞனுக்கு மரண தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி

இசை கேட்ட இளைஞனுக்கு மரண தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி

0 minutes read

வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய கலாசாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி, தென் கொரியாவின் கே-பாப் இசையை கேட்டதற்காகவும், தென் கொரிய திரைப்படங்களை பார்த்ததற்காகவும் 22 வயது இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெற்கு ஹவாங்கே மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளைஞன் 2022ஆம் ஆண்டு 70 தென் கொரியப் பாடல்களைக் கேட்டதாகவும், மூன்று திரைப்படங்களைப் பார்த்ததாகவும், அவற்றைப் பகிர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக, தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.