செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா முதல் மடிக்கக்கூடிய ‘ஐபோன் டியோ’ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்!

முதல் மடிக்கக்கூடிய ‘ஐபோன் டியோ’ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்!

1 minutes read

கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்ற ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ‘ஐபோன் டியோ’வை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரி ஜான் டர்னஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐபோன் 18 சீரிஸ், ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சீரிஸ் சாதனங்களும் வெளியிடப்பட்டன. இந்த அறிமுக நிகழ்வு, ஆப்பிள் டிவி மற்றும் யூட்யூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

இந்தியாவில் ஐபோன் டியோவின் 256 ஜி.பி. அடிப்படை மாடலின் விலை ரூ.2,99,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 512 ஜி.பி. மாடல் ரூ.3,24,900, 1 டி.பி. மாடல் ரூ.3,74,900 மற்றும் 2 டி.பி. மாடல் ரூ.4,49,900 ஆகிய விலைகளில் விற்பனைக்கு வரவுள்ளன. ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய இரு நிறங்களில் வெளியாகும் இச்சாதனத்துக்கான முன்பதிவு ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 23 முதல் நேரடி விற்பனை தொடங்கவுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, ஐபோன் டியோவில் 7.6 அங்குல ‘சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர்’ மடிக்கக்கூடிய உள்புறத் திரையும், 5.4 அங்குல வெளிப்புறத் திரையும் வழங்கப்பட்டுள்ளன. உள்புறத் திரை பாலிமர் மற்றும் கண்ணாடிப் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வெளிப்புறத் திரை மற்றும் பின்பகுதிக்கு செராமிக் ஷீல்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவில் தலா 48 மெகாபிக்சல் கொண்ட பிரதான மற்றும் அல்ட்ரா வைடு கேமராக்கள், வினாடிக்கு 120 பிரேம்கள் வேகத்தில் 4கே காணொளி பதிவு செய்யும் வசதியுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் சென்டர் ஸ்டேஜ் கேமரா மற்றும் திரையின் கீழ் செயல்படும் ஃபேஸ் டைம் கேமராவும் இதில் உள்ளன.

நீண்ட பேட்டரி ஆயுள், மின்காந்த வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 நிமிட சார்ஜிங்கில் 5 மணி நேரம் வீடியோ இயக்கும் திறன் ஆகிய சிறப்பம்சங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையாக இ-சிம் வசதியுடன் உலகளவில் வெளியாகும் ஐபோன் டியோ, ‘ஐஓஎஸ் 27’ இயங்குதளத்தில் இயங்குவதுடன் ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்கும் வகையிலான பிரிக்கப்பட்ட திரை வசதியையும் கொண்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.