Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்த காரணம் என்ன? | இந்தியா உயர்ஸ்தானிகர்

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்த காரணம் என்ன? | இந்தியா உயர்ஸ்தானிகர்

5 minutes read

இலங்கையில் அரசியல் ரீதியில் உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாக விளங்கும் அரசியலமைப்புக்கான 13வது திருத்தச்சட்டம் குறித்து இந்தியா தொடர்ச்சியாக பேசிவருகின்ற காரணத்தை  டெயிலிமிறர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை  அளித்த நேர்காணலில் விளக்கிக்கூறிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை அந்த திருத்தத்தை  ரத்துச் செய்தால் இந்தியாவின் எதிர்வினை எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிளிக்க மறுத்துவிட்டார்.

டெயிலி மிறருக்கு நீண்ட நேர்காணலை இந்திய உயர்ஸ்தானிகர் அளித்தார்.

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக முதலீடு செய்வது, அந்த கொள்கலன் முனைய திட்டம் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், பல நூற்றாண்டுகால நெருங்கிய உறவுகள், நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார அபிவிருத்தியில்  இந்தியாவின் கூட்டுப்பங்காண்மை  போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோபால் பாக்லே  விரிவாக கருத்து தெரிவித்தார்.அவற்றை சுருக்கமாக தருகின்றோம்.

கேள்வி ; இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் உயர்மட்ட பேச்சுவார்த்கைள் இடம்பெற்று வந்திருக்கின்றன. இணங்கிக் கொள்ளப்பட்ட விடயங்களைச் சாதிப்பதற்கு இரு நாடுகளினாலும் மேற் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய உருப்படியான நடவடிக்கைகள் எவை?

பதில் ;  2019 நவம்பருக்கு பிறகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்தியாவுக்கு அரசுமுறை விஜயங்களை மேற்கொண்டார்கள். அவர்கள் பதவியேற்ற பிறகு முதன்முதலாக மேற்கொண்ட அரசுமுறை விஜயங்கள் இவையாகும்.தொலைபேசி ஊடான சம்பாஷணைகள் உட்பட   இவ்வருடம் பூராவும் இரு நாடுகளின் தலைவர்களும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார்கள்.

செப்டெம்பர் 20 பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ராஜபக்சவும் இணையவழி உச்சிமகாநாட்டையும் நடத்தினார்கள்.வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும்  வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனாவும் கொவிட்-19 தொற்றநோயின் விளைவான இடையூறுகளையும் மீறி இரு தரப்பு விஜயங்களை பரஸ்பரம் மேற்கொண்டார்கள். கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முத்தரப்பு மகாநாடொன்றுக்காக கொழும்பு வந்திருந்தார்.

இந்த பல்வேறு உயர்மட்ட ஊடாட்டங்கள்  இரு தரப்புகளுக்கும் இடையில் உள்ள நல்லுறவையும்  இந்திய – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இரு தரப்பும் கொண்டிருக்கும் பொதுவான பற்றுறுதியையும் பிதிபலிப்பவையாக அமைந்திருக்கின்றன.அவை உலகளாவிய மாற்றங்கள் இடம்பெறுகின்ற  நேரத்தில் இலங்கையுடனான எமது நெருங்கிய உறவுகளுக்கு வழிகாட்டல்களையும் உத்வேகத்தையும் கொடுக்கின்றன.

இலங்கையும் இந்தியாவும் கொவிட்-19 தொற்றுநோய் தோற்றுவித்திருக்கும் சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்படுகின்றன.இவ்வருடம் மார்ச்சில் பிரதமர் மோடியின் முன்முயற்சியில் ‘ சார்க் ‘ தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்தாலோசனையின் விளைவாக கொவிட்-19 தொற்றுநோயை தோற்கடிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட பிராந்திய நிதியத்துக்கு  மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யும் நாடுகளாக இந்தியாவும் இலங்கையுமே விளங்குகி்ன்றன.

இலங்கைக்கு பல தொகுதி மருத்துவ உதவிகளை இந்தியா உலகமே அத்தியாவசிய  மருந்துவ விநியோகங்களுக்கு பற்றாக்குறையை எதிர்நோக்கிய ஒரு நேரத்தில் வழங்கியது. நான் வெசாக் வாரமான சபநேரத்தில் 12.5 தொன்கள் மருத்துவ உதவிகளுடன் விசேட விமானத்தில் இலங்கையை வந்தடைந்தேன்.

அடுத்த 5 வருடங்களுக்கு இந்தியாவின் நன்கொடை உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவிருக்கும் உயர்விளைவு சமூக  அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்பபடுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இரு நாடுகளும் கடந்தமாதம்  புதுப்பித்துக்கொண்டன. இது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் முன்னிைலையில் கைச்சாத்திடப்பட்டது.இலங்கையின்  சகல மாகாணங்களையும் உள்வாங்கும் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகினன்றன.இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை முதலில் 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது

எமக்கு பொதுவான  பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு கோடி 50 இலட்சம் டொலர்கள் நன்கொடை உதவியையும்  பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

13 வது திருத்தம் மீதான வலியுறுத்தல்

பதின்மூன்றாவது திருத்தம் இலங்கையில் அரசியல் ரீதியில் உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாக இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா இலங்கையை தொடர்ச்சியாக வலியுறுத்துவதன் காரணத்தால்   நாட்டில் இந்திய விரோத உணர்வுகள் தூண்டிவிடப்படுகின்றன.அவ்வாறிருந்தும் இந்தியா தொடர்ந்து அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறதே என்று உயர்ஸ்தானிகரிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நன்கு தெரிந்ததே.நெருங்கிய அயல்நாடு மற்றும் கடல்சார் பங்காளி என்ற வகையிலும் பிரிக்கப்படாத, உறுதியான, பாதுகாப்பான , பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடாக இலங்கை விளங்கவேண்டியது அதன் சொந்த நலன்களுக்கும் அதேவேளை, இந்தியாவின் நலன்களுக்கும் உகந்ததாகும். 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்திய வலியுறுத்தல் இலங்கையை பலப்படுத்தவேண்டும் என்ற அக்கறையின் விளைவானதே.

இந்த மகத்தான நாட்டின் தமிழர்கள் உட்பட சகல மக்களினதும் நியாயபூர்வமான  அபிலாசைகளுக்கு இணங்க சமாதானம், சுபிட்சம் நோக்கி  முன்னேற்றம் காண்பதற்கு  எமது பங்கையாற்ற நாம் தயாராகவே இருக்கிறோம்.போரின் முடிவுக்கு பிறகு வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு உதவுவதன் ஊடாக இந்தியா தனது பங்கையாற்றிவருகிறது.அடுத்து இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் அதே உதவியை இந்தியா விஸ்தரித்திருக்கிறது.

13வது திருத்தத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் கிளம்பியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அவ்வாறு இலங்கை செய்தால் இந்தியாவின்  எதிர்வினை எவ்வாறனதாக இருக்கும் என்றுகேட்டபோது உயர்ஸ்தானிகர் இது ஊகத்தனமான கேள்வி இதற்கு பதிலளிகக்க முடியாத என்ற மறுத்துவிடடார்.

கேள்வி ;  பொருளாதார உறுவுகளைப் பொறுத்தவரையில்  சீனாவுடனான உறவுகளை இலங்கை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தியா உண்மையில் கவலைப்படுகிறதா?

பதில்;  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பரம்  வளப்படுத்தப்பட்ட உறவுகள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.அவை பாரிய, தூய்மையான ஆலமரம் போன்றவை.இரு நாடுகளினதும் மக்களுக்கு பொதுவான பெருமைக்குரிய இடப்பரப்பை வழங்குபவை.

மத நம்பிக்கைகள்,வழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் மொழிகளில் உள்ள பொதுத்தன்மை குறித்து நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். சமகால யுகத்தில், திரைப்படங்கள், இசை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பங்களிலும் சமாதானம் மற்றும்  சுபிட்சத்துக்கான  ஒத்துழைப்பிலும்  இரு நாடுகளும் மேலும் நெருங்கிவந்திருக்கின்றன. இரு நாடுகளினதும் மக்களுக்கு அவர்களுக்கிடையிலான பொதுத்தன்மைகள் குறித்த விளக்கப்பாடு இருக்கிறது.அவை எமக்கிடையிலான உறவுகளை நெருக்கமாக்குகின்றன.

மூலோபாயம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நலன்களிலும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான அபிலாசைகளிலும் வலுவான சங்கமம் இருக்கிறது.இரு நாடுகளினதும் பரஸ்பர பாதுகாப்பு நலன்களில் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு துரதிர்ஷ்டவசமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் எமது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் எதிர்நோக்கப்படும்  சவால்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக பாதுகாப்பு விவகாரத்தில் “இந்திய முதலில்” என்ற கொள்கையை அண்மையில் இலங்கை வலியுறுத்தியத து குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பொருளாதார பரரப்பிலும் கூட இலங்கையின் மிகப்பெரிய வாணிபப் பங்காளியாக இந்தியாவே விளங்குகிறது. உயர்மட்ட முதலீட்டாளர்களக்கு புறம்பாக, இலங்கையின் சுற்றுலா பயணிகளுக்கான மூலமுதலாகவும் இந்தியாவே இருக்கிறது. இலங்கை வேறு எந்தவொரு நாட்டுடனும் கொண்டிருக்கும் உறவுமுறையை நிறப்பிரிகையாகக்கொண்டு  இலங்கையுடனான  தனது உறவுமுறையை இந்தியா பார்ப்பதில்லை.இலங்கையுடனான ஆழமாக வேர்விட்ட , நீண்டகால பன்முக நாகரிக உறவுகளில் இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கிறது.இலங்கை தனது மக்களின் பொருளாதாரம் மற்றும் துறைகளிலும் மக்களின் அபிலாசைகளுக்காக பணியாற்றுவதிலும் தெரிவுகளை மேற்கொள்வதில் கொண்டுள்ள விவேகத்திலும் இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கிறது.

கேள்வி ; இலங்கை துறைமுக நகரத்துக்காக வெளிநாட்டு முதலீடுகளை நாடுகிறது.இந்திய கம்பனிகள் துறைமுக நகரில் முதலீடு செய்வதை நீங்கள் உற்சாகப்படுத்துவீர்களா? 

பதில் ; இந்தியாவின் வாணிபத்துறையும் கைத்தொழில் துறையும் பொருளாதார நிலைவரம், அரசியல் உறுதிப்பாடு  மற்றும் குறிப்பிட்ட செயற்திட்டமொன்றின் பயனடைந்துள்ளமை ஆகியவை பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை கணக்கில் எடுத்தே வழமையாக தீர்மானங்களை எடுக்கிறது.முதலீட்டாளர்களுக்கு நேசமான சூழ்நிலையும் இதில் பெரும் பங்காற்றுகிறது. அரசாங்கம் இதற்கு அனுசரணையாக மாத்திரமே செயற்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More