Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் | வெற்றி பெற இன்னும் 260 ஓட்டங்கள்

இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் | வெற்றி பெற இன்னும் 260 ஓட்டங்கள்

2 minutes read

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவதற்கு 5 விக்கெட்டுகள் மாத்திரம் கையிலுருப்பில் இருக்க இன்னும் 260 ஓட்டங்கள் தேவை என்ற நிலையுள்ளது.

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, முதல் இன்னிங்ஸுக்காக திமுத் கருணாரத்ன (118) , லஹிரு திரிமான்ன (140) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 159.2 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களை பெற்ற நிலையில் டிக்ளே செய்தது.

அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 83 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் தமிம் இக்பால் 92 ஓட்டங்களையும், அணித் தலைவர் மோமினுல் ஹக் 49 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் சொல்லும் அளவுக்கு சோபிக்கவில்லை.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் இளம் வீரர் பிரவீன் ஜெயவிக்ரம 6 விக்கெட்டுகளையும், ரமேஸ் மெண்டீஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன் பின்னர் 251 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை 9 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை எடுத்த நிலையில் நான்காம் நாளான இன்று ஆட்டத்தை டிக்ளே செய்தது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 66 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், மெய்டி ஹசன் 2 விக்கெட்டுகளையும், டாஸ்கின் அஹமட் மற்றும் சைஃப் ஹாசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

இதனால் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 437 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கினை நோக்கி பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி வரும் வேளையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்ட நேரம் முடிவதற்கு முன்னரே போட்டி முடிவுக்கு வந்தது.

அதன்படி நான்காம் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தமிம் இக்பால் 24 ஓட்டங்களுடனும், சைஃப் ஹாசன் 34 ஓட்டங்களுடனும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 26 ஓட்டங்களுடனும், மோமினுல் ஹக் 32 ஓட்டங்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க லிட்டன் தாஸ் 14 ஓட்டங்களுடனும், மெய்டி ஹசான் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பங்களாதேஷின் வெற்றிக்கு இன்னும் 260 ஓட்டம் என்ற நிலையிருக்க நாளை போட்டியின் இறுதியும் ஐந்தாவதும் நாள் ஆட்டமாகும். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More