Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

2 minutes read

யூரோ  கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி.

Image

இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

Image

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி அணி இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் எவரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

Image

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

Image

இதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்று யூரோ கிண்ணத்தை கைப்பற்றியது.

Image

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More