செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியது இந்திய அணி!

1 minutes read

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2 – 0 என கைப்பற்றியுள்ளது.

3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று பகலிரவு போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 50 ஓவர்களில் 276 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய சார்பாக விளையாடி 2 விக்கெட்களையும் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட தீபக் சாஹர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More