Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக் : முதல் தங்கம் சீனாவுக்கு : இலங்கை வீராங்கனை முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் : முதல் தங்கம் சீனாவுக்கு : இலங்கை வீராங்கனை முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

2 minutes read

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா.

மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலிலேயே முதல் பதக்கத்கத்தை சீனா தட்டிச் சென்றது. 

இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனையான தெஹானி எகொடவெல முதல் சுற்றிலேயே வெளிறேினார். இதில் இவர் 49 ஆவது இடத்தையேப் பெற்றார்.

China's Yang Qian wins first gold medal of Tokyo Olympics | The Japan Times

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலகலமாக ஆரம்பமானது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கேறும் இந்தப் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரங்கேறி வருகின்றன.

Tokyo Olympics live: China wins first gold medal of the Games - Los Angeles  Times

அதன்படி மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் குயான் தங்கப் பதக்கம் வென்றார். 

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

கொரோனா அச்­சு­றுத்தல் கார­ண­மாக பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்­க­ளுக்­கான பதக்­கத்தை தாங்­களே எடுத்து அணிந்­து­கொள்ள வேண்டும். 

அதன்­படி டோக்­கியோ ஒலிம்­பிக்கில் முதல் தங்­கப்­ப­தக்கம் வென்ற சீன வீராங்­கனை பதக்­கத்தை தானே எடுத்து அணிந்துகொண்டு அதிலும் வரலாற்றுப் பதிவை உருவாக்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More