ஐ.சி.சி. மகளிர் உலக கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் இரத்து

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 2021 ஐ.சி.சி.மகளிர் உலக கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளையாட திட்டமிடப்பட்ட இந்தப் போட்டி, அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண இறுதி மூன்று இடங்களையும், ஐ.சி.சி. மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் தீர்மானித்திருக்கும்.

எவ்வாறாயினும் தென்னாபிரிக்காவில் சமீபத்திய கொவிட்-19 மாறுபாட்டின் தோற்றத்தினால் தகுதிச் சுற்று போட்டிகளை நடத்தும் சிம்பாப்வே உட்பட பல ஆபிரிக்க நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டது.

இதனால் 2021 ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண தகுச் சுற்று போட்டிகளை  கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந் நிலையில் சர்வதேச போட்டிகளில் பெறப்பட்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலக கிண்ண  கிரிக்கெட் தொடரில் அணிகள் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஆசிரியர்