செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆஷஸ் தொடர் | இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடர் | இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது ஆஸ்திரேலியா

1 minutes read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார்.

இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 49 ரன்னில் அவுட்டானார்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 6 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஜாக் கிராலி ஆகியோர் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்தது. ரோரி பர்ன்ஸ் 26 ரன்னில் அவுட்டாகினர்.

அடுத்து கிராலி 36 ரன்னில் அவுட்டானார். அப்போது இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்களை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.

இறுதியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.