செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தானை வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது

1 minutes read

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) இரவு நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிப் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட தகுதிபெற்றது.

மத்திய வரிசை விராங்கனைகள் ஹர்ஷித்தா சமரவிக்ரம., கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுதியங்கனா ஆகியோரின் திறமையான துடுப்பாட்ட ஆற்றல்கள் இலங்கையை வெற்றி பெறச் செய்தது.

பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவி பாத்திமா சானா சகலதுறைகளிலும் பிரகாசித்தபோதிலும் அது இறுதியில் வீண்போனது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 8 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் 7ஆவது ஓவரில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

முன்வரிசையில் இமேஷா துலானி மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

எனினும் மத்திய வரிசையில் ஹர்ஷித்தா சமரவிக்ரம (36), கவிஷா டில்ஹாரி (33) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால் இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர்.

அடுத்து ஜோடி சேர்ந்த நிலக்ஷிகா சில்வா (18 ஆ.இ.), கௌஷினி நுதியங்கனா (10 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் பாத்திமா சானா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

ஷவ்வால் ஸுல்பிகார் (24), குல் பேரோஸா (21) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

 

தொடர்ந்து பாத்திமா சானா (47 ஆ.இ.), டூபா ஹசன் (12 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை சிறந்த நிலையில் இட்டனர்.

ஆனால், இலங்கையின் மத்திய வரிசை வீராங்கனைகளின் சாதுரியமான துடுப்பாட்டங்கள் பாகிஸ்தானை தோல்வி அடையச் செய்தது.

தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்

பந்துவீச்சில் சமரி அத்தபத்து 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமுதி ப்ரபோதா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: பாத்திமா சானா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.