செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

1 minutes read

டிபெண்டர்ஸ் எவ்சி அணிக்கும் வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கும் இடையில் கொழும்பு சுகததாச அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (09) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் தரமிறக்கல் சுற்றின் முதலாவது  போட்டியில்  டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் கோல் போட்ட களிப்பில் அரங்கில் மூலைக் கொடிக் கம்பத்தை கழற்றி சுடுவது போல் செய்து காட்டியதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

இத்தகைய செயல்கள் சகலவிதமான விளையாட்டுக்களிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

இஸ்ரேலுக்கும் ஒஸ்திரியாவுக்கும் இடையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இஸ்ரேல் வீரர் ஒருவர் இதேபோன்று செய்ததற்காக  இரண்டாவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டைக்கு இலக்காகி அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், நியூ யங்ஸ் அணியுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சி 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

டிபெண்டர்ஸ் வீரர்  ஷிபான்  கலீல் 3 கோல்களைப் போட்டு அசத்தினார்.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஷிபான் கலீல் முதலாவது கோலைப் போட்டு டிபெண்டர்ஸ் அணியை முன்னிலையில் இட்டார்.

ஆனால், அடுத்த 15ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் சார்பாக செமுவெல் நிமோ கோல் நிலையை சமப்படுத்தினார்.

எனினும், 40ஆவது நிமிடத்தில்  ஷிபான்  கலீல் தனது இரண்டாவது கோலை போட இடைவேளையின்போது டிபெண்டர்ஸ் எவ்சி 2 – 1 என முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பின்னர் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டிபெண்டர்ஸ் அணி சார்பாக 47ஆவது நிமிடத்தில் மொஹமத் ஆதிவ் சிறப்பான கோல் ஒன்றைப் போட்டார். ஆனால் அவர் கோல் போட்டதைக் கொண்டாடும் வகையில் மூலைக் கொடிக் கம்பத்தை கழற்றி எடுத்து முழந்தாள் படியிட்டு சுடுவது போல் செய்து காட்டியதால் அவருக்கு மத்தியஸ்தர் சத்துர மதுரங்க மஞ்சள் அட்டை காட்டினார்.

 

தொடர்ந்து 60ஆவது நிமிடத்தில் ஷிபான் கலீல் தனது 3ஆவது கோலைப் போட்டதுடன் டிபெண்டர்ஸ் எவ்சியின் 5ஆவது கோலை 75ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர் சந்துன் சந்தரஸ் போட்டார்.

இந்தப் போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சி குறைந்தது 5 கோல்களைத் தவறவிட்டது. அல்லது அவ்வணியின் கோல் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.