செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

1 minutes read

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு நடைபெறவுள்ள இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்துவதாக இருந்தால் இலங்கை அணி துடுப்பாட்டத்திலும் பந்துவிச்சிலும் மிகச் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பவர்ப்ளேயின்போது துடுப்பாட்டத்தில் சரிவடைவதும் பந்துவீச்சில் துல்லியம் இல்லாததுமே இலங்கை தோல்விகளைத் தழுவுவதற்கான காரணிகளாக இருந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குசல் மெண்டிஸ் முதலாவது ஓவரிலும் கமில் மிஷார நான்காவது ஓவரிலும் ஆட்டம் இழந்தது இலங்கையின் தோல்விக்கு மூலக் காரணமாக அமைந்தது.

அது மட்டுமல்லாமல் மத்திய வரிசை வீரர்களிடம் இருந்து போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை.

போதாக்குறைக்கு பந்துவீச்சில் துஷ்மன்த சமீர, நுவன் துஷார, ஏஷான் மாலிங்க ஆகிய மூவரும் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டுக்கு 70 ஓட்டங்களைத் தாரை வார்த்தனர்.

முதலாவது போட்டியில் கமில் மிஷார, சஹான் ஆராச்சிகே ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறியதால் அவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு இன்றைய போட்டியில் சினேத் ஜயவர்தனவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.

அதேவேளை பந்துவீச்சில் துல்லியத்தன்மையை வெளிப்படுத்தத் தவறிய 3 வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்கவை அல்லது சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்தை இன்றைய போட்டியில் விளையாடச் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அறியக் கிடைக்கிறது.

இன்றைய போட்டியில் இலங்கையின் முன்வரிசை, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெற முயற்சிக்க வேண்டும். அதேபோன்று பந்து வீச்சாளர்களும் இலக்கை நோக்கி துல்லியமா பந்துவீச வேண்டும். அல்லது தொடரை பறிகொடுக்க வேண்டிவரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.