செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஆப்கான் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய படைகள் நிரூபணம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஆப்கான் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய படைகள் நிரூபணம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

 

அவுஸ்திரேலிய பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் இம்மாத ஆரம்பத்தில் தலைப்புச் செய்தியாக குற்றஞ் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளி பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் (Ben Roberts-Smith) அவதூறு விசாரணையின் முடிவை பாரியளவில் வெளியிட்டனர். கடந்த ஜூன் 2 அன்று அவுஸ்திரேலியாவின் செய்தித் தாள்களில் முதல் பக்கங்களில் இச் செய்தியே முதலிடம் பிடித்தன.

பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் வழக்கு:

அவுஸ்திரேலிய படைகளால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து இந்த நாடு தீவிர கவனம் செலுத்தியது சமீபத்தில் தான் என்று சிறப்பு புலனாய்வாளரும் முன்னாள் நீதிபதியுமான மார்க் வெய்ன்பெர்க் மெல்போர்னில் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, ஆஸ்திரேலிய நீதிமன்றம் அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எந்தவொரு ஆஸ்திரேலியப் படைவீரர்களும் எப்போதாவது கடுமையான போர்க் குற்றமாக கருதக்கூடிய எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவில்லை என்றும் கூறினார்.

பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகும் அந்த வார்த்தைகள் உண்மையாகவே இருக்கின்றன. ஆயினும் “கொலையாளி” மற்றும் “போர்க் குற்றவாளி” என்ற வார்த்தைகள் செய்தித்தாள் முகப்புப் பக்கங்களில் அதிகமாக தெறித்தன.

போர்க்குற்றத்தில் அவுஸ்திரேலிய படை:

நியூயோர்க் இரட்டைக்கோபுரம் 2001 செப்டம்பரில் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையான மக்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இத்தாக்குதலை ஆப்கானில் உள்ள தலிபான்களே தொடுத்தனர் என்றும், அதனுடைய விளைவாக தலிபானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம் ஆரம்பமாகியது. அமெரிக்காவுடன் கூட்டாளிகளாக இணைந்த அவுஸ்திரேலியத் துருப்புக்கள் 2002ல் ஆப்கானிஸ்தானில் களம் புகுந்தன.

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானில் போரில் நின்றனர். அங்கு நடந்த போர்க்குற்றங்களில் 39 பேரை அவுஸ்திரேலியா படைகள்ப டுகொலை செய்தனர் என்ற அதிர்ச்சி அறிக்கை 2020 இல் வெளியானது.

அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை அப்போது வெளியிட்டது. இதன் போது அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் வெளியாகியது.

ஆப்கானில் 57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியது. 25 படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்தது.

2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள், விவசாயிகள், பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19 முன்னாள் மற்றும் தற்போதைய படைவீரர்களை விசாரணை செய்யவேண்டும் என விசாரணை அறிக்கை பரிந்துரை செய்தது. அவுஸ்திரேலியாவின் விசேட வான்சேவை படையணியை சேர்ந்தவர்களே இந்த போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

போரின் வெட்கக்கேடான பதிவுகள்

இக் குற்றச் சாட்டுக்களையடுத்து நவம்பர் 2020இல் அவுஸ்திரேலியா குறைந்தது 10 சிறப்புப் படை வீரர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவித்தலை அனுப்பியுள்ளது. இதனை அநநாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது ஒரு போர்வீரக்கலாச்சாரத்தின் வெட்கக்கேடான பதிவுகள் வெளியாகியுள்ளன என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் (ADF)தலைவர் தெரிவித்தார்.இந்த கொலைகள் எவற்றையும் மோதலின் உச்சகட்டத்தின் போது நிகழ்ந்தவைகள் என தெரிவிக்க முடியாதவை என்றும் தெரிவித்தார்.

குற்றவாளியின் நோக்கம் தவறானதாகவோ தெளிவற்றதாகவோ அல்லது குழப்பமானதாகவோயிருந்த தருணத்தில் இந்த குற்றங்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் விசாரணைகளை மேற்கொண்ட ஒவ்வொருவரும் யுத்தசட்டங்கள் எவ்வாறு போரிடவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். சில விசேட படைப்பிரிவினர் சட்டத்தினை தங்கள் கைகளில் எடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான கொலைகள் :

பத்து வீரர்களை பணிநீக்கம் செய்ய அவுஸ்திரேலியா நடவடிக்கையானது ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கொலைகளுக்கான நம்பத்தகுந்த ஆதாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சிறப்பு படை வீரர்களினால், நிராயுதபாணியான ஆப்கானிய கைதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்தம் 39 பேர் 23 சம்பவங்களில் கொலைசெய்யப்பட்டதாக நம்கத்தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி முழுமையான
அறிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் 2020இல் வெளியிட்டது.

2005 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்களின் நடத்தை குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் தொகுப்புகளை விவரித்த ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், போரின் மத்தியில் படுகொலைகள் இடம்பெற்றதாற்கான ஆதராங்கள் உள்ளதாகவும் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பானர்வர்களில் சிலர் இன்னும் அவுஸ்திரேலிய இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், இந்த கொலைகள் விரைவில் நியமிக்கப்படவுள்ள சிறப்பு புலனாய்வாளருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் காம்ப்பெல் அப்போது குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர், வியட்நாமில் “Mỹ Lai” மைலாய் படுகொலைக்காக அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் வில்லியம் காலே 22 தென் வியட்நாம் பொதுமக்களைக் கொன்றதற்காக வழக்குத் தொடரப்பட்டது.

அதன்பின் 2003 இல் ஈராக்கில் அபு கிரைப் சிறை துஷ்பிரயோகம், அமெரிக்க வீரர்கள் சார்லஸ் கிரானர், லின்டி இங்கிலாந்து மற்றும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2006 இல் 14 வயது ஈராக் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததற்காகவும், அவரது குடும்பத்தினரைக் கொன்றதற்காகவும் அமெரிக்க துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

2007ல் நான்கு அமெரிக்க பிளாக்வாட்டர் தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களால் 17 ஈராக் குடிமக்கள் கொல்லப்பட்டமைக்கும் வழக்குத் தொடரப்பட்டது.

2010ல் மூன்று ஆப்கானிஸ்தான் குடிமக்களை கொலை செய்ததற்காக அமெரிக்க துருப்புக்கள் தண்டிக்கப்பட்டனர். 2012ல் “காந்தகார் படுகொலை” என்று அழைக்கப்படும் – 16 ஆப்கானிஸ்தான் குடிமக்களை கொலை செய்ததற்காக அமெரிக்க இராணுவ துப்பாக்கி சுடும் ராபர்ட் பேல்ஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இப் போர்க்குற்ற நிகழ்வுகள் அமெரிக்காவை போரில் பொறுப்புக்கூறலை சர்வதேச போர்க்குற்றவியல் வேண்டியது.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்குகள் அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது.

ஈராக் படையெடுப்பிற்கு ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாக உறுப்பினர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சேர்க்கப்பட்ட வழக்கை அமெரிக்கா நிராகரித்து மறுத்துவிட்டது.

ஆயினும் இதற்கு மாறாக போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் அவுஸ்திரேலியாவின் அன்றைய சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், ஆப்கானிஸ்தானிடம் மன்னிப்புக் கோரிமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவுஸ்திரேலிய பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் சூடு பிடித்துள்ள இப் போர்க்குற்ற விவகாரம் குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்குற்றவாளி பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்தின் விக்டோரிய விருதை மீளப் பெறவும் பலர் கோரியுள்ளனர்.

காலங் கடந்தாவது உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாக பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்தின் அவதூறு விசாரணையின் முடிவு வெளிவந்துள்ளது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.