2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
கிளிநொச்சி வைத்தியசாலை தனது சேவையை கிளிநொச்சி நகரில் நிறுத்தி வெளியேறும் முன்னர் மக்கள் சென்று குடியேறிய தற்காலிய இடங்களில் இருந்த பாடசாலைகள் வைத்தியசாலைகளாக மற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கிளிநொச்சி நகரை விட்டு மக்கள் முற்றாக வெளியேறி இருந்த போது வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்லாறு, தர்மபுரம் பாதையின் இரு மருங்கிலும் செறிவாக குடியேறி இருந்தனர்.
மக்களின் வைத்திய சேவையினை கருத்தல் கொண்டு வட்டக்கச்சி வைத்தியசாலையின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டது. வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரதான கட்டிடத்திக்கு மேலதிகமாக இரண்டு நோயாளர் விடுதிகள் கிடுகு கோட்டைகளினால் அமைக்கப்பட்டது. பிரசவ விடுதி இருந்த கட்டிடம் சிறு திருத்தங்களுடன் சத்திர சிகிச்சை வசதிகளுக்காக ஒழுங்கு செயப்பட்டது. காயம் அடைந்தவர்களையும் கடும் சுகவீனம் உற்றவர்களையும் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக நோயாள் விடுதிகளில் வசதியாக பராமரிக்க கூடியாத இருந்தது.
அத்துடன் இராமநாதபுரம் அ.த.க. பாடசாலைகளின் இரண்டு கட்டிடங்கள் தற்காலிக வைத்தியசாலைகள் இயங்குவதற்காக ஒழுங்கு செயப்பட்டிருந்தது. அங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கக் கூடியதாக தற்காலிக ஒழுங்குகள் மேற்கொள்ளபட்டன.
இடம்பெயந்த சுழலில் மருத்துவ சேவையை வழங்குவதற்கு ஆளணியை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டி இருந்தது . முழங்காவில் வைத்தியசாலையில் கடமை ஆற்றிய ஊழியர்கள் அனைவரும் வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு சேவைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். ஒரு சில ஊழியர்கள் தவிர பெரும்பாலான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்தனர். அவர்கள் வட்டக்கச்சி வைதியசாலையிலும் அதன் சுற்றயலிலும் குடியேற்றப்பட்டனர். ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்களும் வைத்தியசாலைப் பகுதியில் இரண்டு தகரக் கோட்டைகள் அமைக்கப்பட்டு குடியேற்றப்பட்டனர்.
இடம்பெயந்து தற்க்காலிக இடங்களில் குடியேறிய மக்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்பட்டனர். தாக்குதலினால் அயலவர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புகளை கண்டு சோர்வடைந்தார்கள். காயப்பட்டவர்கள் அல்லல்ப்படுவதை பார்த்து விரக்தி அடைந்தார்கள். அவர்களின் முகங்களில் பதட்டம் வெறுப்பு சோர்வு எனப் பல உணர்வுகள் காணப்பட்டன. நிம்மதி பெருமூச்சுக்ககாக தங்களின் இஸ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தனர்.
வட்டக்கச்சி வைத்தியசாலையை பார்வையிட்டு தர்மபுரம் வைத்தியசாலையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்.
ஆயிரக்கணக்கான மக்கள் வட்டக்கச்சி முருகன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த சூரன் போர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் வைத்தியசாலை ஒழுங்கமைப்பில் கலந்து கொண்டிருந்த எமக்கு அந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மன நிலை காணப்படவில்லை.
கிளிநொச்சி நகர் வெறி சோடியது.
வட்டக்கச்சி பகுதியில் குடியேறிய மக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வட்டக்கச்சி முருகன் கோவிலில் நடைபெற்ற சூரன் போர் நிகழ்வில் கலந்து கொண்டனர்…………
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/