செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

5 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 

– வணக்கம்LONDON –

கிளிநொச்சி பெருநகர் இடப்பெயர்வின் போது தர்மபுரம் வைத்தியசாலையில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை மேலதிகமாக மேலும் சில இடங்களில் வைத்திய சேவையை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டது தர்மபுரத்தில் இருந்து ஐந்து கிலோமிற்றர் தொலைவில் அமைந்திருந்த விஸ்வமடு பகுதியில் உள்ள பாடசாலையில் ஒருதொகுதி மருந்து பொருட்களையும் ஆரம்பத்தில் வைப்பதற்கும் பின்னர் இயக்குவதற்கும் முன்னேற்பாடுகள் செய்தோம்.

அதன் முதற்கட்டமாக விஸ்வமடு பாடசாலையில் வைத்தியசாலையை இயக்குவதற்காக அனுமதியை பெறுவதற்காக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தங்கியிருந்த உடையார் கட்டு தற்காலிக விடுதிக்கு சென்று இருந்தேன். அப்போதைய கல்விப்பணிப்பாளராக இருந்த திரு. தெய்வேந்திரம் அவர்கள் அப் பாடசாலையின் ஒரு பகுதியில் வைத்தியசாலை இயங்குவதற்கான சம்மத்தத்தினை தெரிவித்தார்.

5

விஸ்வமடு மகாவித்தியாலயத்தின் அதிபராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்களும் இன்னும் பலரும் வந்து முதலாவதாக இரண்டு கட்டிடங்களை எங்களின் தேவைக்காக தளபாடங்களை அப்புறப்படுத்தி கையளியளித்தனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட வைத்தியசாலை உபகரணங்களும் மருந்து பொருட்களும் இறக்கப்பட்டன.

பாடசாலையின் மைதனப்பகுதியின் அருகே இருந்த நீண்ட கட்டிட தொகுதி மகப்பேற்று விடுதியாக தயார் செயப்பட்டது. அதனோடு இருந்த இன்னுமோர் கட்டிடத்தொகுதி கயமடைந்தவர்களுக்கான சிகிச்சை அளிக்கும் விடுதியாக மற்றம் மற்றம் செய்யப்பட்டது.

மேலும் சிறிய கட்டிடத்தொகுதியில் இருந்த கணணி அறை இரு பிரிவுகளாக பிரித்து ஒன்று சத்திர சிகிச்சைக் கூடமாக மாற்றப்பட்டது. மற்றையது மகப்பேற்று விடுதியாக மாற்றப்பட்டது. இன்னும் சில நாட்கள் செல்ல மேலும் இரு கட்டடங்கள் வெளிநோயாளர் பிரிவாகவும் மருத்துவ விடுதியாகவும் இயக்கப்பட்டது. அத்தோடு ஓர் அறையில் பற் சிகிச்சை கூடமும் இயங்கத் தொடங்கியது.

DR.மனோகரன் அவர்கள் அக் காலப்பகுத்தியில் இரவு பகலாக பிரசவ விடுதியின் முழுப் பொறுப்பை ஏற்றிருந்தார். அத்துடன் சத்திர சிகிச்சை விடுத்திக்கான பொறுப்பினை DR. சிவநாதன் அவர்கள் ஏற்று மிக சிறப்பாகவும் சேவையினை செய்து வந்தார். DR.மனோகரன் அவர்கள் மகப்பேற்றுக்கு பிரசவத்திக்கு பொறுப்பான சேவையினை செய்த அதேவேளை தாய் சேய் நலன் கிளினிக், கர்ப்பவதிகளுக்கான கிளினிக் என்பவற்றை DR. கார்த்திகேயன், DR திலீபன் என்பவர்கள் செய்து வந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னுமோர் விடையமாகும்.

7

கார்த்திகை, மார்கழி மாதங்களில் வன்னியில் நடந்த அனேக மகப்பேற்று பிரசவங்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கும் பகுதிகளுக்கு மேலதிகமாக இந்த வைத்தியசாலையல் மட்டும் மேற்கொள்ள வசதிகள் செயப்பட்டிருந்தது.

2008 கார்த்திகை மாதம் 421 பிராவங்கள் இவ் வைத்தியசாலையிலேயே மேற்கொள்ளப்பட்டது இவற்றுள் 65 க்கு மேற்ப்பட்டவை சத்திர சிகிச்சை பிரசவங்களாக அமைந்திருந்தது. மேற்ப்படி சத்திர சிகிச்சை பிரசவங்களுடன் கற்பப்பை அகற்றுதல் உள்ளடங்களாக பல பெண்ணியல் சத்திர சிகிச்சைகளும் அக்காலப்பகுதியில் நடைபெற்றது.

அக்காலப்பகுதியில் சத்திர சிகிச்சை பிரசவங்கள் செய்தபின் எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படவில்லை. குறிப்பாக சத்திர சிகிச்சைக்கு உரிய உபகரணம் மற்றும் பிரசவ அறை என்பன உரிய முறையில் தோற்று நீக்கப்பட்டு பாவனைக்கு உட்படுத்தப்பட்டது. மேற்ப்படி சத்திர சிகிச்சை பிரசவங்களை திருமதி யசோதரன் என்ற தாதி உத்தியோகத்தர் பொறுப்பேற்று கடமைசெய்து வந்தமை இவ் சத்திர சிகிச்சை கூடம் சிறப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணம் ஆகும். “இக் காலப்பகுதியில் IHS நிறுவனத்தில் பயின்று வெளியேறிய தாதி உத்தியோகத்தர்களின் கடமை மிகவும் உதவியாக இருந்தது” என DR.மனோகரன் கூறினார்.

8

அதேவேளை தர்மபுரம் வைத்தியசாலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்கள் கடமையாற்றி கொண்டிருந்தனர்

விஸ்வமடு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் ஓலை கொட்டைகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இடம்பெயர்ந்த நிலையில் இருந்த பல்வேறு பிரதேச மாணவர்கள் தமது கல்வியினை தொடர்வதற்காக அங்கு வருகை தந்திருந்தனர்.இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த நிலையிலும் மாணவர்கள் தமது கல்வியை தொடர்ந்த வண்ணம் இருந்தனர்,

அக்கராயன் வைத்தியசாலையில் நீண்டகாலம் கடமையாற்றிய DR.திருச்சிற்றம்பலம் அவர்கள் விஸ்வமடு வைத்தியசாலைக்கு வந்து வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றினார். அவரோடு DR. கோபாலபிள்ளை, DR. சிதம்பரநாதன் போன்றவர்களும் இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளில் தங்களால் இயன்றவரை கடமையாற்றினர்.

பாடசாலைச் சூழல் மிகவும் நெருசலகக் காணப்பட்டது சிகிச்சைக்காக பல நுற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலைக்கு வந்து சென்றனர் இதற்காக பாடசாலை வளாகத்தின் பிற்ப்பகுதியில் ஓர் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது.

9

வழமை போல் வைத்தியசாலை மற்றும் பாடசாலை சூழல் என்பதால் பொது மக்கள் தங்களது தற்காலிக குடிகளையும் அமைத்திருந்தனர். இதனால் அங்கு குடிநீர் பிரச்சினை ஏற்ப்பட்டது. பாடசாலையில் இருந்த கிணறுகள் துப்பரவாக்கப்பட்டு பவானைக்காக ஒழுங்கு செய்யப்பட்டது.

தாதியார்கள், வைத்தியர்கள் தங்குவதற்காக பாடசாலை அருகில் இருந்த இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டது. பாடசாலையில் காணப்பட்ட கூரை இடப்படாத தற்காலிக கட்டிடத்திக்கு தற்காலிக கூரை இடுவதற்கு ஒழுங்குகள் செயப்பட்டது இருப்பினும் அதனை மேற்கொள்ள முடியவில்லை. இது தவிர மேலதிக மலசகூடங்கள் பலவற்றை பாடசாலையின் உட்ப்புறம் அமைக்கப்பட்டன.

இடம்பெயர் காலங்களில் ஓர் பாடசாலையை வைத்தியசாலையாக மாற்றி சிறப்பாக இயங்கியமைக்கு விஸ்வமடு பாடசாலை வைத்தியசாலை ஓர் நல்லதோர் உதாரணம் ஆகும் . நெருக்கடியான சுழல் ஒன்றில் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் ஒற்றுமை உணர்வும் சவால்களை எதிர் கொள்ள வலிமையான காரணிகள் ஆகும்.

இவ்வாறு இடப்பெயர்வு தொடர்தவண்ணம் இருந்தது ……………………

 

 

தொடரும்…

 

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More