Wednesday, October 21, 2020

இதையும் படிங்க

வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த ஊழியருடன் நெருங்கிப் பழகிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.” இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களைப் பரிசோதனை செய்ய கொக்கல சுற்றுலா விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்த நிலையில் வீடு திரும்பவிருந்த...

’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது

“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.” இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.

மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் 105...

ஆசிரியர்

எந்தச் சட்டங்களாலும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாது: தீபச்செல்வன்

இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் தமிழ் மக்களை ஒடுக்கி ஆள்வதையே எமர்சனின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.

இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை  ஊக்குவிப்புக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் குறித்து ஆராய வந்திருந்த எமர்சன் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும்போது கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதியை நிலைநாட்டத் தவறினால் இந்த விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபை வரை செல்லலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன? பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது. சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.

terrorism act in sri lanka க்கான பட முடிவு

கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய – கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது.

தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் அரசின் மூலம் உத்தியோக பூர்வமற்ற முறையில் இனக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த தீவின் சிறுபான்மைத் தமிழ் இன மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அழிக்கும் உத்தியோகபூர்வ முறையை அதிகாரத்தை அரச எந்திரம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இனவாதிகளுக்கும் கையளித்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றிலேயே சுதந்திரமாக வாழ இயலும் என்றும் அது தமிழீழம் என்ற நாட்டிலேயே சாத்தியமாகும் என்றும் முடிவுக்கு வர அடிப்படையாக இருந்த காரணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் கடந்த 49 வருடங்களாக பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தைக் கூறியேனும் கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் குறித்து கேட்க இடமில்லை என்ற நிலையும் காணப்பட்டது. இது தமிழ் மக்களின் அரசு அல்ல என்பதையும் இது தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் அரசு என்பதையும் தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தமிழ் அரசு ஒன்றின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் இச்சட்டத்தின் நடைமுறைகள் ஈழத் தமிழ் இனத்திற்கு உணர்த்தி நின்றன.

சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் எமர்சன் எச்சரித்திருக்கிறார். எனினும் பயங்கரவாத ஒடுக்குதல் குறித்த ஐ.நாவின் துறை சார்ந்த நிபுணர் ஈழத் தமிழர்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் மாத்திரமின்றி உலகெங்கிலும் நடந்த ஒடுக்குமுறைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் எமர்சனும் ஐ.நாவும் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எமர்சனின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு வழமைபோல நிராகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாகவும் அது ஒரு கொடிய சட்டம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அனல் பறக்கப் பேசியிருந்தார்.

இதேவேளை இவ் வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை இடம்பெற்ற சமயத்தில் ஜெனீவாவில் வைத்து பேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட இருப்பதாக மங்கள சமரவீர கூறியிருந்தார். மிகக் கொடிய இந்த சட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறதே தவிர, இதன் உள்ளடக்கம் மாற்றப்படவில்லை என்று மனித உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். சர்வதேச சமூகத்திற்காக சட்டத்தின் பெயரை மாற்றுவதுடன் சிங்கள இனவாதிகளை சமாளிக்க சட்டத்தின் உள்ளடக்கத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.

எமர்சன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுவதற்கு சில நாட்களின் முன்னர், அதாவது ஜூன் மாத இறுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கூறியிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துமாறு கோரிய சில பலம்பொருந்திய நாடுகளும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டு 49 ஆண்டுகள் என்றால் பயங்கரவாத சட்டத்தை நீக்கு! என்று தமிழ் மக்கள் குரல் எழுப்பியும் 49 ஆண்டுகள் என்று அர்த்தம். இச் சட்டத்தால் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தையரை இழந்துபோயுள்ளனர். கைதகளின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சிறையில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் சட்டமும் அதனை கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் தென்னிலங்கையின் அரசியல் முதலீடுகளாக ஆகியிருப்பதே இத் தீவின் பெரும் துயரமாகும்.

terrorism act in sri lanka க்கான பட முடிவு

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாகவே புதிய பயங்கரவாத தடைச் சட்டம் உருவக்கப்படும் எனவும் அனைத்து மக்களும் பயமின்றி வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படும் எனவும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க டெல்லியில் வைத்து கூறியிருந்தார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை நீக்கும் எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.

ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது.  தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ளாமல் எந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தமிழர்களின் இன உரிமைப் போராட்டத்தின் பயணத்தை தடுக்க இயலாது. இதனை 2009 இனப்படுகொலையின் பின்னர் பல்வேறு தடவைகள் ஈழத் தமிழ் மக்கள் உணர்த்தி விட்டனர்.

ஆசியாவின் மண்டேலா என்றும் ஆசியாவின் காந்தி என்றும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கே வழங்க வேண்டும் என்றும் எமது தலைவர்களாளேயே வருணிக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுதல் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு ஒப்பானது என்று கூறியதும் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் காண்பிக்கும் மௌனமும் , பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் தொடர்பிலும் பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலை நாட்டுதல் தொடர்பிலும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம்  தொடர்பிலும் பல சேதிகளை சொல்லிச் செல்கிறது.

தீபச்செல்வன்

நன்றி – குளோபல் தமிழ் செய்திகள்

 

இதையும் படிங்க

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

நாளை முதல் மூடப்படுகிறது கொழும்பு மெனிங் சந்தை

கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து...

கொரோனா தொற்று அபாயம் – நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது. இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை,...

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த தீர்ப்பு வெளியானது

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை)...

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பிரித்தானிய நேரம்...

தொடர்புச் செய்திகள்

தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும்...

அச்சுறுத்தும் வகையிலான பேரினவாத படையினர் செயல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது சம்பவம் இடம்பெற்ற...

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினருடன் மோதல்!!

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்

கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...

மினுவங்கொட கொரோனா கொத்தணி | மேலும் 73 பேருக்கு தொற்று!

நாட்டில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம்...

உலகம் வழமைக்கு திரும்புமா? | ஆயிரம் அர்த்தங்கள் பேசும் புகைப்படம்!

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடும் மழை காரணமாக மகாராஷ்ட்ராவில் 27 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்ட்ராவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பேர் சோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட்டை கைது செய்யமுடியாமைக்கு சி.ஐ.டியினர் வெட்கப்படவேண்டும்!

தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஐந்தாண்டு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் பெரும் வீழ்ச்சி!

2020 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 22 வீதம் குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

பிந்திய செய்திகள்

யாழில் பல திருட்டு சம்பவங்களில் கைவரிசை காட்டிய ஐவர் கைது

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்

டெங்கு பரவல் தொடர்பில் சி.யமுனாநந்தா மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை.

கொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

நாளை முதல் மூடப்படுகிறது கொழும்பு மெனிங் சந்தை

கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து...

கொரோனா தொற்று அபாயம் – நாட்டில் மேலும் சில இடங்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தறபோது வெளியாகியுள்ளது. இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை,...

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த தீர்ப்பு வெளியானது

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை)...

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பிரித்தானிய நேரம்...

துயர் பகிர்வு