Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி!!

வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி!!

2 minutes read

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா “நீதிபதி கேட்கிறார்.”

இல்லை,

நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!இல்லை,நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!

அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!

சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!

கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!

நாடு விடுதலை அடைகிறது…!
50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்.

அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான்.

இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை இன்றைக்கும் முன்னெடுத்துப் போராடுகிறான்.

அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் இன்றைக்கும் ஓடி ஓடி உழைக்கிறான்!

90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு “பாரத ரத்னா” விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!

இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்…

1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.

அவர் அடல் பிகாரி வாஜ்பாய்…

இவர் அருமை அய்யா நல்லகண்ணு!!!

அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.

இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி!!

பாரத் மாத்தாக்கி ஜே!!

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். – குறள் 510

குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பக்தருக்கும் , பதருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாத தேசம், தியாகங்களை மதிக்கத் தெரியாத தேசம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More