உலககிண்ண கால்பந்து வீரருக்கு மரணதண்டனை: ஈரானில்பூதாகரமாகவெடித்துள்ள ஹிஜாப் எதிர்ப்புபோராட்டம் : தொடரும் மனித உரிமைமீறல்களும் -தூக்கு தண்டனைகளும் !
——————————————————
கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புடைய இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை ஈரானிய அரசு நிறைவேற்றியுள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நபர்களுக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை தொடர்ந்து நிறைவேற்றி இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்கால்பந்து வீரருக்கு மரண தண்டனை:
இதே வேளை ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கால்பந்து வீரர்களின் சர்வதேச கூட்டமைப்பு ட்விட்டர் பக்கத்தில், “தனது நாட்டின் பெண்களின் உரிமைகளுக்காகவும் அடிப்படை சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்த கால்பந்து வீரர் அமீர் நசீர், ஈரானில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார் என்ற அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளோம். அமீருக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவரது தண்டனையை உடனடியாக நீக்க வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்துவீரர் அமீர்நசீர் :
ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டிலும், பாதுகாப்பு வீரர்கள் பலியானதை சுட்டிக் காட்டியும் அமீருக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது
தொடரும்ஹிஜாப்எதிர்ப்புபோராட்டம் :
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் திகதி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று தெரிவித்து அந்த நாட்டின் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை காவல் நிலையத்தில் வைத்து பொலிஸார் தாக்கியதில், மாஷா அமினி கோமா நிலைக்கு தள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் மாஷா சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 16ம் திகதி உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் சிறப்புக் காவல் படையினரே அடக்கம் செய்தனர்.
இதையடுத்து ஈரானில் உள்ள பெண்கள், ஹிஜாப் அணிவதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் களமிறங்கினர். மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இதில் 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
பெண்கள்போராட்டம்தீவிரம் :
ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக ஈரான் நாட்டின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் நாட்டில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்தப் போராட்டம் சுமார் 80 நகரங்களில் தீ போல் பரவி உள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்த போராட்டம் வெளியே தெரியாதவாறு அப்பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளைத் தளர்த்தி எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அந்நாட்டிற்கு இணையச் சேவைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஐநா சபையில், காவல்துறையினரின் நடவடிக்கையானது நியாயமானது எனக் கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 தாண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக ஈரான் நாட்டின் பெண்கள் ஹிஜாப்பை எரித்து, தலை முடிகளை வெட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
“அறநெறிபொலிஸ்பிரிவை” ஈரான்அரசுகலைப்பு:
மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக சமீபத்தில் ஈரான் அரசு பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் சரியாக அணிவதையும், இஸ்லாமிய சட்டங்களை சரியாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட “அறநெறி பொலிஸ் பிரிவை” ஈரான் அரசு கலைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதுவரை நடந்த போராட்டத்தில் ஈரானின் பாதுகாப்பு படையினர் நடத்திய கொடூரமான தாக்குதலில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் போராட்டத்தில் அத்துமீறியதாக கூறி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தூக்கு தண்டனையும் ஈரான் அரசு நிறைவேற்றி வருகிறது.
400 பேருக்கு 10 ஆண்டுசிறைத்தண்டனை:
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 400 போராட்டக்காரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சமீபத்தில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஈரான் சிறைத் தண்டனை அறிவித்துள்ளது. அதன்படி, 160 பேருக்கு 5 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 80 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையும், 160 பேருக்கு 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஈரான் போராட்டத்தில் 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 40 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், இந்தப் போரட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து இணைய சேவையில் ஈரான் தடங்கல் ஏற்படுத்துவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பூதாகரமாகவெடித்துள்ளபோராட்டம் :
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 22 வயதான மாஷா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று, ஹிஜாப் ஆடை அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் கொடூரமாகத் தாக்கப்பட்ட அப்பெண் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் சிறப்புக் காவல் படையினரே அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் நாடும் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஹிஜாப் ஆடை அணிவதற்கு எதிராகவும், அப்பெண்ணிற்கு நீதி கேட்டும் அங்கு மிகப்பெரிய அளவில் இரண்டு மாதங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஈரான் அரசு, பெண்ணின் மரணத்திற்குக் காரணமான ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் பிரிவைக் கலைத்தது.
இரண்டாவதுதூக்குதண்டனை
போராட்டத்தின் போது 500 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மோஹ்சென் செஹாரி என்ற இளைஞர் போராட்டத்தின் போது போலீசாரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இரண்டு போலீசாரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஜித்ரேசா ரக்னவார்டு என்ற மற்றொரு இளைஞருக்கும் தூக்குத் தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. இச்சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து உரிய விசாரணை ஏதுமின்றி உடனுக்குடன் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு எதிராக ஈரான் அரசு மீது உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது கண்டங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்தை பரப்பிய குற்றத்திற்காகவும், பாதுகாப்பு படையினரைக் கொன்ற குற்றத்திற்காகவும் 20- க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈரான் அரசு மரணத் தண்டனை விதித்துள்ளது.
இதில், கடந்த வாரம் இருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டனர். ஈரான் அரசின் இந்தச் செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மொஷென் ஷெகாரி என்ற நபர், பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக தெரிவித்து அவருக்கு ஈரான் அரசு முதலில் தூக்கு தண்டனை வழங்கியது.
இதையடுத்து தற்போது மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபர் பாதுகாப்பு படை வீரரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டாவது நபராக மஜித்ரிசா ரஹ்நவர்டு-வுக்கு தூக்கு தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நபர்களுக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
