Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தமிழீழம் உருவாகினால் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியுமா? | காவியா

தமிழீழம் உருவாகினால் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியுமா? | காவியா

2 minutes read

புத்தி கேட்பதற்கும் ஒரு புத்தி வேண்டும் என்பர்…

இன்று ஈழத்தமிழர்களாகிய நாம் நிகழ்த்துவது சனநாயக அரசியல் யுத்தம்… ஆகவே எதிரி எவ்வாறு இராசதந்திர ரீதியாக செயற்படுகின்றான் என அறிந்து அதனை counter செய்ய வேண்டும்…

தமிழீழம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, எதிரி திட்டமிட்ட முறையில் கடந்த நீண்ட காலமாக இந்திய கொள்கைவகுப்பில் உள்ள பலருக்கு ஆழமான ஒரு நம்பிக்கையை விதைத்து உள்ளான்..

அந்த நம்பிக்கை என்னவெனில்

தமிழீழம் உருவாகினால் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியும் என்பது..

எதிரியால் இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கிய பொய்யை உடைக்க எம்மவர்கள் செய்த counter work என்ன?

ஈழத்தமிழர்களாகிய நாம்
எதிரி சொன்ன பொய்யை உடைக்க வழிவகையைச் செய்யாது எம்மவர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக இந்தியா எப்போதும் உடன்படாது என்ற கருத்தை ஈழத்தமிழர்களின் மத்தியில் விதைத்தனர்

இத்தகைய ஈழத்தமிழர்களாகிய எம்மவர்களின் நடவடிக்கையை இவ்வாறு அரசியலில் சொல்வர்..
👇
எமது எதிரி எதனை விரும்புகின்றானோ அதனை ஈழத்தமிழர்களாகிய எம்மை கொண்டே எதிரி எங்களை செய்ய வைக்கின்றான் என்பர்…

வேறு முறையில் கூறுவதாயின் இன்றுள்ள எம்மவர்கள் பலரும் எதிரி எதனை விரும்புகின்றானோ அதனைத் தான் செய்கின்றனர்…

எதிரியை counter செய்ய எதிரியிலும் பார்க்க எம்மிடம் அரசியல் பலம், அதிகார பலம், நிதிப்பலம், ஆளணிப்பலம், அறிவியல் பலம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்…

ஈழத்தமிழர்களாகிய எம்மிடம் இன்று எவையும் ஒருங்கிணைக்கப்பட்டு இல்லை…

ஆனால் ஒரு அரச அறிவியல் பலம் கொண்ட ஒரு சிறு குழுவால் எதிரியால் ஏலவே கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்களை counter செய்யக்கூடிய பலமுண்டு…

அவ்வாறு counter செய்து கொண்டு உள்ள எமது சிறு குழுவிற்கு உங்களால் முடிந்த நிதிப்பலத்தை அளித்தால் சிறப்பாக இருக்கும்…

அல்லது எமது ஆக்கங்களை பூரணமாக உள்வாங்கி சந்தேகங்களை கேட்டு தெளிவாகி, உங்களின் கருத்தையும் எங்களுக்கு கூறி அவற்றை விவாதித்து இறுதியாக நாம் அனைவரும் இணைந்து தமிழீழத்தை அடைய தேவையான கருத்துருவாக்கத்தை செய்வோம்.
எமக்கு உறுதுணையாக இருங்கள்..

காவியா
9.13
21/12/2022
இந்தியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More