பிரித்தானிய மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு….பிரித்தானிய மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு….

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் முடி சூடி (02/06/1953) 60 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் லண்டனில் நடைபெறுகின்றன. சிறப்பு நிகழ்ச்சியாக June மாதம் 4ம் திகதி அன்று Westminster Abbey ல் ஆராதனைகள் நடைபெறுகின்றன. காலம் காலமாக அனைத்து பிரித்தானிய அரசர்களும் இங்கேதான் முடி சூடிக்கொள்வது வழக்கம். இதுவரை 38 முடிசூட்டும் நிகழ்வுகள் Westminster Abbey ஆலயத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னர் வில்லியம் 1066 ம் ஆண்டு தனது முதலாவது பட்டாபிஷேகத்தை இவ் ஆலயத்தில் தொடக்கி வைத்தார்.

சுமார் 1272 முதல் 1307 வரை இங்கிலாந்தை ஆட்சி செய்த முதலாம் எட்வர்ட் மன்னன் தற்போதுள்ள சிம்மாசனத்தை வடிவமைத்தான். 14ம் நூற்றாண்டுக்கு பின்னர் வந்த பெரும்பாலான மன்னர்கள் எல்லோரும் இச் சிம்மாசனத்தில் இருந்தே ஆட்சி செய்துள்ளார்கள்.

மகராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 1952 ம் ஆண்டு அட்சிப் பொறுப்பை அவரது தந்தை ஆறாவது ஜார்ஜ்க்குப் பின்னர் பொறுப்பெடுத்தாலும் பதினெட்டு மாதங்களின் பின்னரே முடி சூட்டிக்கொண்டார். இவரது மாபெரும் பட்டாபிஷேக நிகழ்வுக்காக Westminter Abbey ஆலயம் ஐந்து மாதங்கள் மூடப்பட்டு புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றன என்பது சுவாரசியமான செய்தி.

உலகில் இன்றும் சில நாடுகளில் மன்னராட்சி நடைபெற்று வந்தாலும் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு உலக அளவில் இன்றும் செல்வாக்கு இருக்கின்றது. பிரித்தானிய அரசியலமைப்பில் இன்றும் மகாராணிக்கு அதிகாரங்கள் உள்ளது. இவ் முடியாட்சிக்கு பிரித்தானிய மக்களிடம் அதிக செல்வாக்கு இருப்பதுடன் பெருமையாகவும் கருதுகிறார்கள்.

ஆசிரியர்