Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பொலிஸாரை கொலை செய்த சிறுவனுக்கு Pizza Hut துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு

பொலிஸாரை கொலை செய்த சிறுவனுக்கு Pizza Hut துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு

1 minutes read

கனடாவில் இரண்டு எட்மண்டன் பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சிறுவனே, அதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக, அருகிலுள்ள Pizza Hut உணவகத்தில் நபர் ஒருவரை சுட்டுக்காயப்படுத்தியிருக்கலாம் என எட்மண்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ரவை கோது, கான்ஸ்டபிள்கள் டிராவிஸ் ஜோர்டான் (வயது 35) மற்றும் பிரட் ரியான் (வயது 30) ஆகியோர் கடந்த வியாழன் அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட குடியிருப்பில் இருந்த மீட்கப்பட்ட துப்பாக்கியுடன் பொருந்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிறுவனுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்த புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி : கனடாவில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு அதிகாரிகளின் இறுதிச் சடங்கு அடுத்த வாரம்

எட்மண்டன் அதிகாரிகளைக் கொன்ற சிறுவன் ‘மிகவும் பதற்றத்தில் இருந்தான்’

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More